வரலாற்றில் இன்று அக்டோபர் 23 அக்டோபர் 23 (October 23) கிரிகோரியன் ஆண்டின் 296 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 297 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 69 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் கிமு 4004 – அங்கிலிக்கப் பேராயர் ஜேம்ஸ் உச்சரின் கணிப்பின் படி அகிலம் படைக்கப்பட்டது. கிமு 42 – மார்க் அந்தோனி, ஆகுஸ்டஸ் ரோமப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டஸ் தற்கொலை செய்து கொண்டான். 425 – மூன்றாம் வலன்டீனியன் ஆறாவது அகவையில் ரோமப் பேரரசன் ஆனான். 1157 – டென்மார்க்கில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. மன்னன் மூன்றாம் சுவெயின் கொல்லப்பட்டு முதலாம் வால்டிமார் அரசனானான். 1707 – பெரிய பிரித்தானியாவின் முதல் நாடாளுமன்றம் கூடியது. 1739 – பிரித்தானியப் பிரதமர் ரொபேர்ட் வால்போல் ஸ்பெயின் மீது போரை அறிவித்தார். 1870 – பிரான்சின் மெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இறுதிப் போரில் பிரஷ்யா வெற்றியடைந்தது. 1906 – அல்பேர்ட்டோ சாண்டோஸ்-டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது காற்றை விடப் பாரமான வானூர்தியைப் பறக்க விட்டார். 1911 – முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பாவிக்கப்பட்டது: இத்தால...